29th of July 2015
சென்னை:36 வயதினிலே’ படத்தை தொடர்ந்து மீண்டும் முழுக்க முழுக்க பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘வல்லதேசம்’.. அதற்கேற்றமாதிரி படத்தின் ‘கதை’நாயகியாக நடித்திருப்பவரும் முப்பது வயதை தாண்டிய அனுஹாசன் தான். 20 வருடங்களுக்கு முன் ‘இந்திரா’ படத்தில் கதாநாயகியாக நடித்தவரும் கமலின் அண்ணன் மகளுமான அதே அனுஹாசன் தான்.
இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் நாசர்.. இந்தப்படத்தை எழுதி இயக்கியுள்ள என்.டி.நந்தா லண்டனை சேர்ந்தவர். ஒளிப்பதிவுக்காக அங்கே பல விருதுகளை வாங்கியுள்ளார். இந்தப்படத்திற்கு எல்.வி.முத்துக்குமாரசாமி என்பவர் இசையமைத்துள்ளார். காலஞ்சென்ற இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதனின் மகன் தான் இவர்.
இந்தப்படத்தில் சிம்பு, உற்சாகம் தரக்கூடிய ஒரு பாடலை நட்புக்காக பாடியுள்ளார். இந்தப்பாடலை பாடி முடித்ததும் இது தன்னுடைய தற்போதைய சிச்சுவேஷனுக்கு சரியாக பொருந்துவதாக சொன்னாராம் சிம்பு. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் ஆகஸ்ட்-1ஆம் தேதி கமல்-பாரதிராஜா முன்னிலையில் நடத்தத் இருக்கிறார்களாம்.
Comments
Post a Comment