எனக்கும் அந்த கல்வி நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை: ராதிகா தடாலடி!!!

2nd of June 2015
சென்னை:கல்வி நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடித்த நடிகை ராதிகா, அந்த கல்வி நிறுவனத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள ஒரு ஹொட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிகை ராதிகா நடித்துள்ளார்.

அந்த கல்வி நிறுவனம், விளம்பரத்தில் சொல்லுவது போல் செயல்படுவதில்லை, அதன் உட்கட்டமைப்பு வசதிகளும் நன்றாக இல்லை என்று சமூக வலை தளங்களில் வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் அந்த கல்வி நிறுவனத்துடனான தனது தொடர்பு பற்றி நடிகை ராதிகா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகை ராதிகா சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், அந்த கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் மட்டுமே நான் நடித்துள்ளேன். மற்றபடி, அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.
 
மேலும், பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Comments