2nd of June 2015
சென்னை:தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு அதிக ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த வாரம் மாசு திரைப்படம் வெளிவந்தது.
சென்னை:தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு அதிக ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த வாரம் மாசு திரைப்படம் வெளிவந்தது.
மாசு படத்தில் வழக்கம்போல தனது நகாசு மற்றும் ஜிகினா வேலைகளை கொஞ்சம் தாராளமாகவே காட்டியிருக்கிறார் வெங்கட்பிரபு. அஜீத், விஜய் இருவரின் நண்பராகிவிட்டதால் அவர்கள் படங்களின் பின்னணி இசையையும் படத்தில் பயன்படுத்தியுள்ளார்.
முக்கியமாக, சூர்யா கத்தியை எடுக்கும் காட்சியில், கத்தி படத்தின் பின்னணி இசை வருகிறது. அதேபோல் நான் கடவுள் ராஜேந்திரன் அறிமுகக் காட்சியில் வீரம் படத்தின் பின்னணி இசை.
சூர்யாவும், பிரேம்ஜியும் கப்பல் படை அதிகாரிகளாக வரும் காட்சியில் சூர்யாவின் பெயரை ஜெகதீஷ் என்றும், பிரேம்ஜியின் பெயரை விநாயக் மகாதேவ் என்றும் வைத்திருப்பார். ஜெகதீஷ் கத்தியில் விஜய்யின் பெயர். விநாயக் மகாதேவ் மங்காத்தாவில் அஜீத்தின் பெயர்.
இந்த பின்னணி இசை, பெயர் இரண்டிலும் ஹீரோ சூர்யாவுக்கு விஜய்யின் பெயர், பின்னணி இசை என்றால், காமெடியன்களுக்கு அஜீத்தின் கதாபாத்திரப் பெயர் மற்றும் பின்னணி இசை.
எப்படி எங்க தலயின் பெயரை ஒரு காமெடியனுக்கு பயன்படுத்தலாம் என்று அஜீத் ரசிகர்கள் இணையத்தில் குமுற, சபாஷ் இதுதான் சரி என்று விஜய் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.
Comments
Post a Comment