ஆந்திராவை கலக்கும் அஜித், விஜய், சூர்யா; கோபத்தில் தெலுங்கு சினிமா!!!

5th of June 2015
சென்னை:தென்னிந்தியாவை பொறுத்த வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளாக திரையுலகம் பிரிந்துள்ளது. 

மொழி தான் வேறு தவிர, அனைத்து நடிகர்களுக்கு ஒற்றுமையாக தான் இருந்தனர்.

ஆனால், சில காலங்களாகவே தெலுங்கு மீடியாக்களுக்கு தமிழ் சினிமா நடிகர்களை கண்டாலே கோபம் தான் வருகிறதாம்.
இதற்கு முக்கிய காரணம் நேரடி தெலுங்கு படங்களுக்கே போட்டி கொடுக்கும் அளவிற்கு ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், விஷால் படங்கள் உள்ளதாம்.
 
இதனால், பல தெலுங்கு நடிகர்கள் மீடியாக்களை தூண்டி விட, ஆந்திராவில் நடக்கும் தமிழ் பட விளம்பர நிகழ்ச்சியில் சில மீடியாக்கள் பங்கேற்காமல் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை காட்டி வருகிறார்களாம்.

Comments