5th of June 2015
இளைய தளபதி விஜய் தொடர்ந்து தனது படங்களில் பாடல் பாடி வருவதும் அப்பாடல் மெகா ஹிட்டாவதும் நாமறிந்ததே. அதிலும் 'துப்பாக்கி' படத்தில் கூகுள் கூகுள் பாடல், 'தலைவா' படத்தில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா ,அதனை தொடர்ந்து 'கத்தி' படத்தில் செல்ஃபிபுள்ள பாடலையும் பாடி அதையும் சூப்பர் ஹிட்டாக்கினார்.
சென்னை:தமிழ் சினிமாவின் மாஸ் என்றாலே ரஜினி, கமல், விஜய் அஜித் . அதிலும் விஜய் .அஜித் என்றால் இணைய ரசிர்களுக்கு இன்னும் கொண்டாட்டம் தான்.
இளைய தளபதி விஜய் தொடர்ந்து தனது படங்களில் பாடல் பாடி வருவதும் அப்பாடல் மெகா ஹிட்டாவதும் நாமறிந்ததே. அதிலும் 'துப்பாக்கி' படத்தில் கூகுள் கூகுள் பாடல், 'தலைவா' படத்தில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா ,அதனை தொடர்ந்து 'கத்தி' படத்தில் செல்ஃபிபுள்ள பாடலையும் பாடி அதையும் சூப்பர் ஹிட்டாக்கினார்.
தற்போது இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் 'புலி' படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார் இவருடன் பிரபு, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறார்கள
ஏற்கனவே 'துப்பாக்கி', 'தலைவா', 'கத்தி' பாடங்களில் விஜய் பாடிய பாடல்கள் ஹிட்டாகிய நிலையில் 'புலி' படத்திலும் ஒரு பாடல் பாட வேண்டுமென விஜய் ரசிகர்கள் விரும்பியதால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய புலி படத்திலும் தேவி ஸ்ரீபிரசாத் இசையில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
இந்த பாடல் பதிவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.
Comments
Post a Comment