ரஜினியுடன் நடிக்க போகும் நடிகை வித்யா பாலன்?!!!

4th of June 2015
சென்னை:ரஜினிகாந்த் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கக் போகும் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கபட உள்ளது.

இந்நிலையில் படத்தில் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வுகளை முடித்து விட்ட ரஞ்சித் இன்னும் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிக்கக் போகிறார் என்பது மட்டும் தெரியவில்லை.

முதலில் இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடி இல்லை என்று கூறினாலும் கதையில் ரஜினியுடன் பயணிக்கும் ஒரு முக்கிய கதாபத்திரம் இருக்கிறது.
 
ஆகையால் ஒரு வடஇந்திய நடிகை தேர்வு செய்ய வேண்டும் என்பது தாணுவின் ஆசை.அந்தவகையில் வித்யா பாலன் தேர்வு செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் கசிகிறது.

Comments