3rd of June 2015
சென்னை:இந்தியில் 'மௌன குரு' படத்தின் ரீமேக்கான 'அகிரா' படத்தின் உருவாக்கத்தில் பிசியாக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ். சமீபத்தில் ஒரு சின்ன ஓய்வு எடுத்துக்கொண்டு சென்னை வந்திருக்கிறார்.
வந்தவர் திடீரென தனது துணை இயக்குநரான திருக்குமரன் இயக்கும் ‘கெத்து’ பட ஷூட்டிங்கிற்கு வருகை புரிந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பாருங்க கெத்து ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு யார் வருகை புரிந்துள்ளார் என’, எங்களுக்கு ஆதரவு தந்தைமைக்கு கெத்து குழுவின் நன்றிகள் ஏ.ஆர்.முருகதாஸ் சார்’, என ட்வீட் செய்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் அகிரா படத்தில் சோனாக்ஷி சின்ஹா ஹீரோயினாக நடித்து வருகிறார்.
Comments
Post a Comment