சத்யராஜின் த்ரில்லரான 'நைட் ஷோ!!!

29th of June 2015
சென்னை:தமிழ் சினிமாவின் வெற்றிகரமான எடிட்டர்களில் ஒருவரான ஆண்டனி முதல்முறையாக படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
இயக்குனர் விஜய் வழங்க, ஏ.எல்.அழகப்பன் மற்றும் சாம் பால் இப்படத்தை தயாரிக்கின்றனர். சத்யராஜ் நாயகனாக நடிக்கும்
 
க்ரைம் த்ரில்லரான இப்படத்தை இயக்குவதோடு திரைக்கதை எழுதும் பணியையும், எடிட்டிங்கையும் ஆண்டனியே கவனிக்கிறார்.

நைட் ஷோ’வின் ஒளிப்பதிவை எம்.எஸ்.பிரபுவும், இசையமைக்கும் பணியை ஜாய் மேத்யூவும் கவனிக்கிறார்கள். பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்தின் டீஸர், பாடல்கள் விரைவில் வெளிவரவிருக்கின்றன. (மலையாளத்தில் லால், ஸ்ரீனிவாசன், சஜிதா ஆகியோர் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்த ‘ஷட்டர்’ படமே தமிழில் ‘நைட் ஷோ’வாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது)

Comments