'பிகே' படத்தின் சாதனையை முறியடித்த 'புலி' டீசர்!!!

25th of June 2015
சென்னை:சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், சுதீப், தம்பி ராமையா, உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘புலி’. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்றைய முன் தினமும், டீஸர் நேற்றும் வெளியாகி இணையத்தில் டிரெண்டை உருவாக்கி வருகிறது.

இந்நிலையில் டீஸரை மட்டும் இதுவரை 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர். தற்போது புதிய செய்தியாக இதுவரை வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் அதிகம் இணையத்தில் டவுண்லோடு செய்யப்பட்ட போஸ்டராக புலி போஸ்டர் மாறியுள்ளது.
 
இதற்கு முன்பு அமீர்கானின் 'பிகே' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகம் டவுண்லோடு செய்யப்பட்ட லிஸ்டில் முதலிடத்தில் இருந்துவந்தது. தற்போது விஜய்யின் ‘புலி’ டீஸர் அந்த சாதனையை முறியடுத்து முதலிடம் பிடித்திருக்கிறது.

Comments