19th of June 2015
சென்னை:நடிகர் சங்கத்திற்கு சுயமாக நிதி திரட்டி புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பதவி மோகத்திற்காக நடிகர் சங்கத்தில் போட்டியிவில்லை என்று விஷால் கூறியுள்ளார்.
நாடக, நடிகர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக விஷால் தலைமையிலான அணியினர் இன்று மதுரை வந்தனர். அப்போது விஷால் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் கூறும்போது, நடிகர் சங்கத்திற்கு தனி கட்டிடம் கட்ட சரத்குமார் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் ஒப்புக்கொண்டால் இலவசமாக திரைப்படங்களில் நடித்து, அந்த கட்டிடம் கட்டுவதற்கான நிதியினை திரட்டி தருவோம்.
எங்களின் கோரிக்கைகளை சரத்குமார் அணி ஏற்றுக்கொண்டால் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட மாட்டோம். சரத்குமார் சொல்வதுபோல் இதில் அரசியல் கலப்பு எதுவும் கிடையாது என்று கூறினார்.
விஷால் பேசும்போது அருகில் நாசர், கார்த்தி, பொன்வண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
Comments
Post a Comment