18th of June 2015
சென்னை:ஆங்கிலத் திரைப்படமான ஜுராசிக் வேர்ல்ட், வெளியான இரண்டு நாட்களில் மட்டும் இதுவரை இல்லாத வசூலைக் குவித்துள்ளது.
உலக அளவில் கடந்த வார சனி, ஞாயிறு நாட்களில் மட்டும் இந்த திரைப்படம் 3 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. உலக சினிமா வரலாற்றில் சாதனை படைத்த ஜுராசிக் வேர்ல்ட்
டைனோசர்களை வளர்க்கும் தீம் பார்க் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ஜுராசிக் வேர்ல்ட்.
மே 29ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
வசூலை வாரி குவித்துவரும் இத்திரைப்படம் ரிலீசான நான்கே நாட்களில் 511 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் 3,280 கோடி ரூபாய்) சம்பாதித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.
மொத்த வசூல் சாதனையில் தற்போதுவரை முதல் இடத்தில் இருக்கும் அவதார் படத்தின் சாதனையை இப்படம் முறியடிக்கும் என கூறப்படுகிறது.
Comments
Post a Comment