மேகி நூடுல்ஸ் விவகாரம் : அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித் மீது நடவடிக்கை?!!!

2nd of June 2015
சென்னை:பிரபல உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான் நெஸ்லே நிறுவனத்தின் 'மேகி நூடுல்ஸ்'-ல் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும், ரசாயனம் கலந்து இருப்பதை உத்தரபிரதேச மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்த்ஹு, அந்த நூடுல்சுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. மேலும் மேகி நூட்ல்ஸ் தொடர்பான விளம்பரங்களில் நடித்ததற்காக இந்தி நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் பிரீத்தி ஜிந்தா, மாதுரி தீட்சித் ஆகியோர் மீது நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது.


இது தொடர்பாக அந்த மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரி வி.கே.பாண்டே, பரபங்கி கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மேகி நூடுல்ஸ் விவகாரம் தொடர்பாக ஜூலை 1-ந் தேதி நீதிமன்றத்தில்  ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கோரி டெல்லி, உனாவில் (இமாசலபிரதேசம்) உள்ள நெஸ்லே இந்தியா நிறுவனம், டெல்லியில் உள்ள ஈசி டே நிறுவனம், பரபங்கியில் உள்ள ஈசி டே விற்பனை பிரிவின் உரிமையாளர் மற்றும் மேலாளர் உள்பட 6 பேருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மத்திய நுகர்வோர் விவகார கூடுதல் செயலாளர் ஜி.குருசரண் நிருபர்களிடம் கூறுகையில், "இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம், அனைத்து மாநிலங்களில் இருந்தும் மேகி நூடுல்சின் மாதிரிகளை ஆய்வுக்கு சேகரித்து இருக்கிறது. அவை பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. முழுமையான பரிசோதனை முடிவுகள் இன்னும் 2 அல்லது 3 தினங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஏதாவது விதிமுறைகள் மீறப்பட்டு இருந்தால் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும்."என்று தெரிவித்தார்.

மேகி நூடுல்ஸ் விளம்பர படங்களில் நடித்த நடிகர்-நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று நிருபர்கள்  கேட்டதற்கு, ‘‘ஆம். அந்த விளம்பரங்கள் நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாக இருந்தால் அவர்கள் அதற்கு பொறுப்பு ஆவார்கள்’’ என்று பதில் அளித்தார்.

எனவே, இந்த விவகாரத்தை தொடர்ந்து நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கூடும் என்று எதிர்ப்பார்க்க படுகிறது.

Comments