'மங்காத்தா' இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு!!!

30th of May 2015
சென்னை:சூர்யா நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெலியாகியுள்ளா 'மாசு' படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையடுத்து, வெங்கட் பிரபு அடுத்ததாக, மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார்.

அஜித், திரிஷா நடிப்பில் வெளியான மங்காத்தா மாபெரும் வெற்றி பெற்றது. இதில் அஜித்குமார் வில்லனாக மாறுபட்ட வேடத்தில் நடித்தார். இப்படத்தின் கிளைமாக்ஸ், இரண்டாம் பாகம் உருவாகும் விதத்தில் முடிக்கப்பட்டிருந்தது.
தற்போது, மாசு படத்தை முடித்துள்ள வெங்கட் பிரபு, தனது அடுத்தப்படமாக மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளாராம். விரைவில் அதற்கான வேளைகளில் ஈடுபடவும் உள்ளாராம்.

Comments