20th of May 2015
சென்னை:அவம் படத்துக்காக உலக நாயகன் கமல்ஹாசன் பாடிய “காரிருள்” என்ற பாடல், தலைப்புக்கேற்றவாறே காரிருள் சூழ்ந்த நள்ளிரவு நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கெளரவ், கார்த்தி, வில்வா கிரிஷ், காவ்யா ஷெட்டி உட்பட பலர் நடிக்கும் புதிய படம் “அவம்”.

விஜய் வில்வா கிரிஷ் இயக்கும் இந்த படத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக கமல் பாடிய பாடல்தான் தற்போது பரவலாகப் பேசப்படுகிறது. “காரிருளே” எனத் தொடங்கும் பாடலை கார்க்கி புனைந்துள்ளார். இப்பாடல் பதிவு அண்மையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் கே.எஸ் சுந்தரமூர்த்தி இந்த பாடலுக்கு அமைத்த மெட்டை கமல் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
இந்த பாடல் இன்றைய காலகட்டத்தின் காதல் இழப்பையும், அதனால் ஏற்படும் வலியையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இதுவரையில் கேட்டிராத அளவுக்கு புதுமையாக கமலின் குரல் இந்தப் பாடலில் அமந்துள்ளதாம். இப்பாடலை நேற்று நள்ளிரவு 12 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டனர்.
Comments
Post a Comment