டிடியை வெளியேற்றும் "விஜய் டிவி"; வேறு சேனல் தேடும் டிடி!!!

20th of May 2015
சென்னை:விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்கள் வாயை பிடுங்கி எடுப்பதோடு, அவர்களை பேசவும் விடாமல் பொரிந்து தள்ளும் திவ்யதர்ஷினி, விஜய் டிவி "டெலி அவார்டு" நிகழ்ச்சியில் சிறந்த பெண் தொகுப்பாளினியாக விருது பெற்றுள்ளார். டிடி திருமணத்தை ஒரு மாதம் கொண்டாடியது விஜய் டிவி.

சமிபத்தில் நடைபெற்ற "விஜய் அவார்ட்ஸ்" விருது விழாவில் டிடியின் செயல்பாடுகள் சரியில்லை என பகிரங்கமாக பேசப்பட்டது. விருதில் பலர் கலந்து கொள்ளவில்லை, வந்தவர்களும் பாதியிலே கிளம்பிவிட்டார்கள். 

இதனால் கோபமடைந்த சேனல் தரப்பு டிடியை கூப்பிட்டு கண்டித்ததோடு காபி வித் டிடி நிகழ்ச்சியையும் நிறுத்தியுள்ளனர். கடைசியாக காபி வித் டிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது "36 வயதினிலே" படத்திற்காக ஜோதிகா தான் அதன் பின் நிகழ்ச்சி நடைபெறவில்லையாம்.
 
அதனால் தற்பொழுது டிடி வேறு சேனல் தேடிவருகிறாராம். டிடியின் நட்பு வட்டாரம் சேனலுடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாம். இதனால் சேனலில் உள்ள அனைவரும் கலக்கத்தில் உள்ளார்களாம்.

Comments