22nd of May 2015
சென்னை:இளைய தளபதி விஜய் எப்போதும் தன் ரசிகர்களிடம் அன்பாக தான் இருப்பார். அதே போல் அவருடைய ரசிகர்களும் இவரின் மீது மிகவும் அன்பு கொண்டவர்கள். ஆனால், இவர்கள் அன்பு எல்லை மீறும் போது விஜய் பல இடங்களில் கண்டித்து உள்ளார்.
இந்நிலையில் ஒரு ரசிகர் நாக்கில் சூலம் ஏற்றி கொண்டு விஜய்க்கு காண்பித்தது போல் ஒரு புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகின்றது. இதை அனைவரும் கண்டிக்க, விஜய்யும் இந்த செயலால் கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது. இது போல் தங்களை கஷ்டப்படுத்தி கொள்ளும் எந்த ஒரு செயலையும் விஜய் விரும்பமாட்டார்.
Comments
Post a Comment