வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடித்து வரும் படம் ‘இனிமே இப்படித்தான்’.
இதில் சந்தானத்திற்கு ஜோடிகளாக ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தில் நடித்த ஆஷ்னா சவேரி மற்றும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த அகிலா கிஷோர் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படம் கோடைக்கால கொண்டாட்டமாக வெளியாக உள்ளது.’
முருகானந்த் இயக்கி வரும் இப்படத்தை சந்தானம் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஹேன்ட் மேட் பிலிம்ஸ் சார்பாக தயாரித்து வருகிறார்.சந்தோஷ் குமார் தயாநிதி இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தமிழ் புத்தாண்டு தினமான
நேற்று வெளியிடப்பட்டது. இதில் சந்தானம் லுங்கி அணிந்துக் கொண்டு புல்லட் வாகனத்தில் கை அசைத்து செல்வது போல் உருவாக்கியிருக்கிறார்கள். இது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.
Comments
Post a Comment