முத்தம் இல்லாமல் ஒரு நாள் கூட என் வாழ்வில் கழிந்தது இல்லை: மனம் திறந்த கமல்!!!

27th of March 2015
சென்னை:அன்பானது பல பெயர்களில் கூறப்படுகிறது. பாசம், காதல், பற்றுதல் என்று பலவாறு கூறப்படுகிறது. ஒருவர் மற்றவர் மீது வைக்கும் அன்பின் அதிகபட்ச வெளிப்பாடு முத்தத்தின் மூலம் தான் வெளிப்படுகிறது.

சகோதர, சகோதரிகள் கொடுக்கும் முத்தம், தோழர் தோழிகள் பரிமாறிக்கொள்ளும் முத்தம், கணவன் மனைவிக்குள் கொடுக்கப்படும் முத்தம், காதலன் காதலிக்கு, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு என கொடுப்பவர்களை பொறுத்து அவர்களின் அன்பு மாறுபடுகிறது.

ஆனால் அனைத்தும் ஒருவகையான அன்பு தான். இந்த முத்தத்தை பற்றி உலக நாயகன் கமல் என்ன கூறுகின்றார் தெரியுமா??
'முத்தம் இல்லாமல் ஒரு நாள் கூட என் வாழ்வில் கழிந்தது கிடையாது. இந்த அன்பின் சின்னத்தை ஏன் கலாச்சார சீரழிவாக பார்க்கிறார்கள் என்பது மட்டும் எனக்கு இன்னும் விளங்கவில்லை. தினமும் என் தாயிடம் கன்னத்தில் முத்தம் பெற்ற பின் தான் வீட்டிலிருந்து வெளியே கிளம்புவேன்' என்று கூறியுள்ளார்.

Comments