செல்வராகவன் இயக்கும் படம்; சிம்புவுடன் நடிக்கும் த்ரிஷா, தாப்ஸி!!!

24th of March 2015
சென்னை:தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கும் படம் அடுத்த மாதம் தொடங்குகிறது. சிம்பு ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள்.
 
செல்வராகவன் படத்தில் நாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். இந்தப் படத்திலும் அப்படியே. த்ரிஷா மற்றும் தாப்ஸி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
 
முக்கியமான விஷயம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். செல்வா - யுவன் என்ற வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைவது இசை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்.

Comments