காக்கா முட்டை தேசிய விருது பெற்ற குழந்தைகளுக்கு தங்க சங்கிலி பரிசளித்த தனுஷ்!!!

27th of March 2015
சென்னை:62-வது தேசிய விருதுக்கான படங்கள் இரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. 'காக்கா முட்டை' படத்திற்கு சிறந்த குழந்தைகளுக்கான தேசிய விருது பெற்றது.

மேலும் இதில் நடித்த சிறுவர்களான விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருதையும் பெற்றது.

எம்.மணிகண்டன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
 
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸும், வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் பிலிமும், ஏ.ஆர்.முருகதாஸின் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோசும் இணைந்து தயாரித்துள்ளது.

Comments