கிருத்திகா உதயநிதி இயக்கம் அடுத்த படத்தில் சிம்பு, அனிருத்!!!

27th of March 2015
சென்னை:கிட்டத்தட்ட 3 வருடங்களாக சிம்புவின் எந்த படங்களையும் திரையில் காண முடியவில்லை. இந்நிலையில் இந்த வருடம் ரிலீஸ்க்கு ரெடியாக இருக்கும் வாலு, இது நம்ம ஆளு மற்றும் தற்போது நடித்து கொண்டிருக்கும் கௌதம் படம், செல்வராகவன் படம் என பெரிய இயக்குனர்களின் படங்கள் கையில் வைத்துள்ளார்.
 
இந்த தடவை வந்தால் பெரிய வெற்றியோடு திரும்ப வேண்டும் என்று ஒரு முடிவோடு முழு கவனமும் சினிமாவின் மீது பதித்து இருக்கிறார், இந்நிலையில் பிரபல பெண் இயக்குனரும், உதயநிதியின் மனைவியுமான கிருத்திகா உதயநிதியின் அடுத்த படத்தில் நடிக்க சிம்பு கமிட் ஆகியுள்ளார்.
 
பெண்கள் என்றாலே சர்ச்சையில் சிக்கும் சிம்பு இந்த நேரத்தில் பெண் இயக்குனரிடம் சிக்கியுள்ளார். இவர் ஏற்கனவே மிர்ச்சி சிவாவை வைத்து வணக்கம் சென்னை என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் முதன்முறையாக அனிருத், சிம்பு படத்துக்கு இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments