விஷ்ணுவிடம் நலம் விசாரித்த அஜீத் - ஆச்சரியத்தில் ஆழ்ந்த விஷ்ணு!!!

6th of March 2015
சென்னை:சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அறிமுகமானவர் விஷ்ணு. சினிமாவில் நடிப்பதற்கு முன்பு இவர் கிரிக்கெட் வீரராக இருந்தவர்.

மாநில அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டு ஆடியவர். அப்போது அவரது காலில் ஏற்பட்ட பலத்த காயத்துக்கு பிறகு கிரிக்கெட் விளையாட்டில் இருந்து வெளியேறி சினிமா நடிகரானார் விஷ்ணு.
 
ஆனால், சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு அதிரடி ஆட்டக்காரராக திகழ்ந்தார். அவரது ஆட்டம் காரணமாக சென்னை அணி வெற்றி பெற்று வந்தது.

ஆனபோதும், 2012ல் நட்சத்திர கிரிக்கெட் ஆட்டத்தில் கலந்து கொண்டபோது அவரது கையில் காயம் ஏற்பட்டது. அதையடுத்து மெட்டல் பிளேட் வைக்கப்பட்டு மீண்டும் விளையாடி வந்த விஷ்ணுவுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு கையில் இருந்த மெட்டல் பிளேட் நேற்று நீக்கப்பட்டது.
தென்னிந்திய சினிமாவில் அனைவரிடத்திலும் அன்பாக பழக கூடியவர்களில் அஜித்தும் ஒருவர்.

சமீபத்தில் அஜித்-ஷாலினி தம்பதியினருக்கு சென்னையின் பிரபல மருத்துவமனை ஒன்றில் ஆண் குழந்தை பிறந்தது.

அதே மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சைக்காக நடிகர் விஷ்ணு அனுபதிக்கப்பட்டுள்ளார். இதை அறிந்த அஜித் நேற்று அவரை சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார்.
 
இதுகுறித்து விஷ்ணு கூறுகையில் 'அஜித் சார் என்னை பார்க்க வந்த போது நான் ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன், மிகவும் எளிமையான மனிதர் அவர்' என்று கூறியுள்ளார்.

Comments