17th of February 2015
சென்னை:பவர்ஸ்டாருக்கு ஆப்பு வைக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளார்களாம். பவர்ஸ்டார் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் படத் தயாரிப்பாளர்களை பற்றி குறைபாடுகிறாராம்.
மேலும் படப்பிடிப்பில் தன்னை சந்திக்க வரும் ரசிகர்களுக்கு பிரியாணி தான் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம்.
இது தவிர அவருடன் வரும் பாதுகாவலர்களுக்கு பேட்டா கொடுக்குமாறு கூறி தயாரிப்பாளர்களை படாதபாடு படுத்துகிறாராம்.
அவ்வப்போது சூப்பர் ஸ்டாருக்கு போட்டி என்றால் அது இந்த பவர் ஸ்டார் தான் என பஞ்ச் வசனம் வேறு பேசுகிறார்.
மேலும் தன்னை பிரபலமாக்கிய சந்தானத்தையும் தாக்கிப் பேசியுள்ளார். இதனால் தயாரிப்பாளர்கள் கடுப்பாகி இனி யாரும் பவருக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் அளிக்கக் கூடாது என்று இயக்குனர்களிடம் தெரிவித்துள்ளார்களாம்.
இது குறித்து அறிந்த பவர் சிறிது காலம் அடக்கி வாசிக்க முடிவு செய்துள்ளாராம்.
Comments
Post a Comment