27th of February 2015
சென்னை:தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்திகள் என்றால் விஜய், அஜித் தான். இவர்கள் படங்களுக்கு தற்போது தமிழகம் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
சென்ற வருடம் வெளிவந்த கத்தி திரைப்படம் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதே போல் இந்த வருடம் விக்ரமின் ஐ படம் ரூ 200 கோடி வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படம் கடந்த 22ம் தேதியுடன் ரூ 100 கோடியை கடந்துள்ளது. இப்படம் இந்தியாவில் ரூ 73 கோடியும், வெளி நாடுகளில் ரூ 28 கோடியும் வசூல் செய்துள்ளது.
Comments
Post a Comment