21st of February 2015
சென்னை:’பீட்சா’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தின்
மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் சுப்புராஜ்,
இயக்கிய ‘ஜிகர்தண்டா’ படமும் மாபெரும் வெற்றி பெற்றது. பீட்சா படத்தின்
வெற்றியால், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகியுள்ள விஜய்
சேதுபதி, மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.
கார்த்திக்
சுப்புராஜ், தான் இயக்கும் புதிய படத்திற்கு ‘இறைவி’ என்று தலைப்பு
வைத்துள்ளார். திருகுமரன் எண்டெர்யின்மெண்ட் சார்பில், சி.வி.குமார்
தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, இயக்குநர்
எஸ்.ஜே.சூர்யா , கருணாகரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஜிகர்தண்டா
படத்தின் ஒளிப்பதிவாளர் கேவ்மிக் யு ஆரி, ஒளிப்பதிவு செய்யும்
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசயமைக்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு
செய்ய, விஜய்முருகன் கலைத் துறையை கவனிக்கிறார். ஒலிக்கலைவை
தொழில்நுட்பத்தை விஷ்னு கோவிந்த் மற்றும் ஸ்ரீ ஷங்கர் கவனிக்கிறார்கள்.
இப்படத்தில்
நடிக்கும் நாயகிகள், பிற நடிகர் நடிகைகள் தேர்வு
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் இறுதியில்
தொடங்குகிறது.
Comments
Post a Comment