விஜய்யுடன் இணையும் வடிவேலு, ரசிகர்கள் உற்சாகம்!!!

27th of February 2015
சென்னை:இளைய தளபதி விஜய் தற்போது புலி படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படம் முடிந்த கையோடு அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.
 இப்படத்தின் ஹீரோயின் தேடல் இன்னும் நடந்து கொண்டு இருக்க, தற்போது ஒரு ருசிகர தகவல் வெளிவந்துள்ளது.இதில் நடிகர் வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

இவர்கள் கூட்டணியில் வெளிவந்த பகவதி, வசீகரா, போக்கிரி, காவலன் ஆகிய படங்களின் நகைச்சுவை காட்சிகள் இன்றும் எல்லோராலும் ரசிக்கப்படுபவை.

Comments