1st of February 2015
சென்னை:இசை எங்கிருந்து வருகிறது? என்பது யாருக்கும் தெரியாது, ஆனால், கண்டிப்பாக இசைக்கு ஈகோ இருக்கிறது. தன் கண்முன்னே தன் சிஷ்யன் வளர்வதை தான், எல்லா குருக்களும் விரும்புவார்கள். அப்படியிருக்க திடிரென்று அவர்களையே தாண்டி ஒரு இடத்திற்கு சிஷ்யன் செல்லும் போது தான் பிரச்சனை வெடிக்கிறது.
அப்படி ஒரு பிரச்சனையான கதைக்களத்தை கையில் எடுத்து, அதை தனக்கே உரிய சூப்பர் ஸ்பெஷல் திரைக்கதையில் கலக்கியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
படத்தின் கதை
கதையாக பார்த்தால் இசை சாம்ராஜியத்தை வெற்றிச்செல்வன் என்ற பெரிய ஜாம்பவான் ஆண்டு கொண்டிருக்கிறார். அப்படியிருக்க அவரிடம் உதவி இசையமைப்பாளராக இருக்கும் சிவாவிற்கு அவரை போலவே பெரிய இசையமைப்பாளராக வேண்டும் என்று ஆசை.
ஒரு நாள் தன் குருவிற்கு எதிராகவே இசையமைக்க செல்லும் சிவா, 2 வருடத்தில் புகழின் உச்சிக்கு சென்று விடுகிறார். இதை ஏற்று கொள்ள முடியாத வெற்றி செல்வன் தன் ஈகோவை பல வழிகளில் காட்டுகிறார். இதற்கிடையில் எஸ்.ஜே.சூர்யாவிற்கும், ஜென்னி என்ற பெண்ணிற்கு சிறிய ரொமான்ஸ் போஷன் வந்து செல்கிறது.
வெற்றி செல்வன், சிவா இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது தான் மீதிக்கதை. இதை எப்படி தன் அனுபவத்தின் மூலம் எஸ்.ஜே.சூர்யா கூறியிருக்கிறார் என்பதே படத்தின் ஸ்பெஷல்.
நடிகர், நடிகைகளின் பங்களிப்பு
ஒரு பேட்டியில் சத்யராஜ் இந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்க வில்லை என்றால், நான் நடிக்க வந்ததே வேஸ்ட் தான் என்று கூறியிருந்தார். அவர் கூறியது 100% உண்மை. எஸ்.ஜே.சூர்யாவும் சிவா என்ற கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். கதாநாயகி சாவித்ரி தான் கொஞ்சம் ஏமாற்றுகிறார். ஆனால், மிக அழகாக இருக்கிறார்.
க்ளாப்ஸ்
சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யாவின் ஈகோ க்ளாஷ் விஷயத்தை மிகவும் அருமையாக கையாண்டது, கஞ்சா கருப்பின் காமெடி நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிக்க வைக்கிறது. படத்தின் வசனம் ஒவ்வொன்றும் எஸ்.ஜே.சூர்யாவிற்கான ஸ்டைலில் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது.
படத்தின் இசையும் அவரே என்பதால் பின்னணி இசையில் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். மேலும், இசை வீசி பாடல் டாப் 10 வரிசையில் இடம்பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. வெல்கம் பேக் எஸ்.ஜே.சூர்யா சார்.
பல்ப்ஸ்
சில இடங்களில் லாஜிக் என்பதே இல்லை, என்ன தான் காரணம் சொன்னாலும் இந்த கதை நம் கண்முன் வாழ்கின்ற சில நபர்களை நியாபகப்படுத்த தான் செய்கின்றது.
மொத்தத்தில் இந்த இசையை கண்டிப்பாக ரசித்து கேட்(பார்க்)கலாம்.
Comments
Post a Comment