17th of January 2015
சென்னை:ஷாம் ஆண்டன் இயக்கியிருக்கும் காதல், திகில், சென்டிமென்ட் கலந்த பேய்படமாக வந்திருக்கும் படம் தான் டார்லிங். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் முதல் முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார், அவரே இப்படத்திற்க்கு இசையமைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். கருணாஸ், பாலசரவணன் மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் காமடியில் கலக்கியுள்ளனர்.

நிக்கி கல்ராணி ஜி.வி.யை விழுந்து விழுந்து காதலிக்கிறார். ஜி.வி விலகி போகிறார். இருவருக்கு நெருங்கிய நண்பர்களான கருணாஸ், பாலசரவணன் நிக்கி– ஜி.வியை சேர்த்து வைப்பதற்காக புறநகரில் இருக்கும் பங்களாவிற்கு அவுட்டிங் போகின்றார்கள். அங்கு போனதும் நிக்கியின் உடம்புக்குள் அங்குள்ள ஸ்ருதியின் ஆவி புகுந்துகொள்கிறது. ஜி.வி, நிக்கியை தொடும்போதெல்லாம் நிக்கியின் உடம்பிற்குள்ள ஆவி ஜி.வியை அடித்து அந்தரத்தில் தொங்கவிடுகிறது. நிக்கிக்குள் உள்ள ஸ்ருதியின் ஆவி யாரென்றால் அதேவீட்டில் தன் காதலனுடன் கொள்ளபட்ட பெண். தங்களை கொன்ற 5பேரையும் பழிவாங்கிவிட்டு வந்தால் உன் காதலியை விட்டு போகிறேன் என ஜி.வியிடம் சொல்கிறது ஸ்ருதி ஆவி.
ஜி.வி.பிரகாஷ், கருணாஸ், பாலசரவணன்ஆகியோர் அந்த 5பேரையும் தேடிப்பிடித்து ஸ்ருதி முன் நிறுத்தி பழிவாங்கினார்களா? ஸ்ருதி ஆவி நிக்கியை விட்டு விலகியதா? ஜி.வி, நிக்கி சேர்ந்தார்களா? என்பது தான் டார்லிங் படத்தின் மீதி கதை.
ஜி.வி.பிரகாஷ் பிரமாதமாக பயந்து, நடுங்கி நடித்துள்ளார். நிக்கி கல்ராணி அழகு பதுமையாக மட்டும் வராவல் நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார், ஆவி புகும் காட்சிகளில் பிரமிக்க வைக்கிறார். கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷ் இசையும் ரசிகர்களை மேலும் மிரட்டுகிறது. டார்லிங் பிரமாதமாக பயமுறுத்தி ரசிகர்களை அலற வைக்கிறது.
Comments
Post a Comment