23rd of January 2015
சென்னை:வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களினால் இணையதளங்களின் உதவியுடன் தன்னுடைய ரசிகர்களை நேரடியாக சினிமா பிரபலங்கள் தொடர்பு கொண்டு அவர்களிடம் பேசி வருவது நாம் அறிந்த விஷயம் தான். அதிலும் தற்போது பேஸ்புக்கை விட, ட்விட்டரில் தான் பிரபலங்களின் ராஜ்ஜியம் அதிகரித்து வருகிறது.
இதில் த்ரிஷா, ஸ்ருதிஹாசன், சமந்தா, ஹன்சிகா போன்றவர்களை பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். சமீபத்தில் தான் ஹன்சிகாவிற்கும், சமந்தாவிற்கும் பத்து லட்சம் ரசிகர்கள் பின் தொடர ஆரம்பித்தனர்.
ஆனால் இதில் த்ரிஷா, ஸ்ருதிஹாசன், ஹன்சிகாவிற்கு மட்டும் அதிகாரப்பூர்வமான பக்கம் என்று ட்விட்டர் உறுதிபடுத்தியுள்ளது. பத்து லட்சம் தொடர்பாளர்களை கொண்ட சமந்தாவிற்கு இன்னும் ட்விட்டர் பக்கம் உறுதிபடுத்தவில்லை.
இதற்கு காரணம் சமந்தா ஏற்கனவே ஒரு பக்கத்தை ஆரம்பித்து விட்டு, உடனே அதை நீக்கி வேறொரு பக்கத்தை தொடங்கியதால் தான் இன்னும் அவருடைய டிவிட்டர் பக்கம் உறுதி படுத்தப்படவில்லை என்று கூறுகின்றனர்.
ஸ்ருதிஹாசன், ஹன்சிகாவிற்கு மட்டும் தானா..சமந்தாவுக்கு இல்லையா…இந்த டிக் மார்க்
Comments
Post a Comment