எனக்கு கஷ்டத்தில் உதவிய சிம்பு! கௌதம் மேனன் நெகிழ்ச்சி!!!

13th of January 2015
சென்னை:என்னை அறிந்தால் படத்தின் ரிலிஸ் வேலைகளில் கௌதம் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்படம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார் கௌதம்.
இதில் வெறும் என்னை அறிந்தால் பற்றி மட்டும் பேசாமல், தான் வாழ்வில் சந்தித்த பல நெருக்கடிகளையும் பற்றி பேசியுள்ளார்.
 
அவர் கூறுகையில் ‘நான் போன வருடம் இதே நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி கொண்டிருந்தேன், அந்த நேரத்தில் எனக்கு உதவி செய்தவர் சிம்பு தான், என் கையில் அந்த தருணத்தில் ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது என்றால் அதற்கு காரணம் சிம்பு மட்டுமே’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Comments