9th of January 2015
சென்னை:நடிகை திரிஷா- தொழிலதிபர் வருண் மணியன் திருமணம், மார்ச் மாதம் நடக்கிறது. திருமண நிச்சயதார்த்தம், வரும் 23ம் தேதி நடக்கிறது.
தமிழில், 2002ல் வெளியான, 'மவுனம் பேசியதே' படத்தில் நாயகியாக அறிமுகமான திரிஷா, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட, 56 படங்களில் நடித்துள்ளார்.
இவர், அஜீத்துடன் நடித்த, 'என்னை அறிந்தால்' படம், வரும் 29ம் தேதி வெளியாக உள்ளது. இவர், ஜெயம் ரவியுடன் நடித்த, 'பூலோகம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து, 'போஸ்ட் புரடக் ஷன்' வேலை நடந்து வருகிறது.
அப்பா டக்கர், லயன்' படங்களின், படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே திருமணம் நடந்தால் படத்துக்கு பாதிப்பு ஏற்படும்.
எனவே உடனே திருமணம் நடக்க தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். திருமணத்தை தள்ளி வைத்துக்கொள்ளுங்கள் என்று திரிஷாவிடம் கூறியுள்ளனர்.
அவர்களுக்கு ஆறுதல் கூறி இருக்கும் திரிஷா. ‘கவலைப்படாதீர்கள். உங்களுக்கு பாதிப்பு வராதபடி பார்த்துக்கொள்கிறேன்' என கூறினாராம்.
இது குறித்து வாய் திறக்காமல் இருந்த திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ‘ஜனவரி 23ம் தேதி வருண் மணியனுடன் எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது.
எளிமையாக நடக்க உள்ள இந்நிகழ்ச்சியில் இருவீட்டாரும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்கின்றனர். எனது திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
அப்படி முடிவு செய்தால் அதை நானே முதலில் தெரிவிப்பேன். மேலும் நடிப்புக்கு முழுக்குபோடும் எண்ணமும் எனக்கில்லை. இன்னும் சொல்லப்போனால் விரைவில் 2 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆக உள்ளேன்' என குறிப்பிட்டிருக்கிறார்.
தயாரிப்பாளர்களின் எதிர்ப்பையடுத்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் மார்ச் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த திரிஷா திருமணம் வரும் டிசம்பர் மாதத்துக்கு தள்ளிவைப்பது பற்றி குடும்பத்தினர் ஆலோசித்து வருகிறார்களாம்.
Comments
Post a Comment