22nd of January 2015
சென்னை:பொங்கலுக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கும் ஷங்கரின் ஐ திரைப்படம் அடுத்த மாதம் சீனாவில் வெளியாகிறது. விக்ரம் – எமி ஜாக்ஸன், சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள
ஐ திரைப்படம் இந்தியாவிலும் உலகின் முக்கிய நாடுகளிலும் ஓடிக்கொண்டுள்ளது. இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.
சென்னை:பொங்கலுக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கும் ஷங்கரின் ஐ திரைப்படம் அடுத்த மாதம் சீனாவில் வெளியாகிறது. விக்ரம் – எமி ஜாக்ஸன், சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள
ஆனாலும் படம் ரூ 100 கோடியை தொடும் அளவுக்கு வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் கூறுகின்றன. விக்ரமுக்கு இதுதான் மிகப் பெரிய படம். அவர் நடித்த படம் ஒன்று இந்த வசூலைத் தொடுவதும் இதுவே முதல் முறை.இந்தப் படத்தின் 40 சதவீத காட்சிகள் சீனாவின் மிக அழகிய பகுதிகளில்தான் படமாக்கப்பட்டுள்ளன.
படத்தின் ப்ளஸ் பாயின்டுகளில் இதுவும் ஒன்று.படத்தை சீனாவில் 7000 அரங்குகளில் வெளியிடுவேன் என்று முதலில் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறியிருந்தார்.
ஆனால் பொங்கலன்று படம் சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளில் வெளியாகவில்லை.மொத்தம் 2400 அரங்குகளில்தான் உலகம் முழுவதும் வெளியான. இந்த நிலையில் படத்தை அடுத்த மாதம் சீனாவில் வெளியிடப் போவதாக ஆஸ்கார் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 19-ம் தேதி சீனப் புத்தாண்டு பிறப்பதால் அதையொட்டி படத்தை வெளியிடப் போகிறார்களாம்.
Comments
Post a Comment