இது தான் உத்தமவில்லன் படத்தின் டிரைலர்!!!

13th of January 2015சென்னை:கமல்ஹாசனின் கதை, திரைக்கதை, வசனத்தில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் லிங்குசாமி மற்றும் ராஜ்கமல் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் உத்தமவில்லன். இந்த படத்தின் படபிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகள் நடைபெற்றுவருகிறது.
 
இந்த படத்தின் டிரைலர் (இன்று) பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது, இந்நிலையில் நேற்று முன்தினம் உத்தமவில்லன் படத்தின் டிரைலரை பிரத்தியேகமாக பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்படி நாங்கள் பார்த்த அந்த டிரைலரை உங்களுடன் வார்த்தைகளில் பகிர்ந்துகொள்கிறேன்.
 
கிட்டத்தட்ட 2 நிமிடம் 10 நொடிகள் ஓடக்கூடிய அந்த டிரைலரின் முதல் காட்சியில் கமல்ஹாசனின் ஆஸ்தான குருநாதர் கே.பாலசந்தர் அவர்களுடன் கமல்ஹாசன் நடந்து வருவது போல் ஆரம்பமாகிறது. அதன் பிறகு கமலுக்கு மட்டுமே உரிய பலவிதமான கெட்டப்புகளில் காட்சியளிக்கிறார், ஒரு காட்சியில் தனது குரு கேபியிடம் எனது கதையையும் சற்று கேளுங்கள் என கமல் குமுறுகிறார்.
 
உடனே கேபி சரி உனக்கு ஒரு நிமிடம் அவகாசம் தருகிறேன் என்று சொல்லி கடிகாரம் ஒன்றை எடுத்துவைக்கிறார், ப்ப்ப்பாபா….என்ன காட்சி அது மிரட்டுகிறார் கமல், அதோடு நடனம், சண்டை என்று அசத்தலாக இருக்கிறது. அதுவும் இறுதியில் திரையின் இரண்டு பக்கங்களில் இருந்து கமலின் கம்பீரமான முகம் தோன்றுகிறது. அதற்கு நடுவில் உத்தமவில்லன் என்ற டைட்டில் வரும் காட்சி அதிரவைக்கிறது.
 
குறிப்பாக ஜிப்ரானின் பின்னனி இசை டிரையிலேயே நம்மை வியக்கவைக்கிறது. மொத்தத்தில் உத்தமவில்லன் டிரைலர் கமலின் முந்தய படங்களை தூக்கி சாப்பிடுகிறது. உலகநாயகன் கமலுக்கு நிகர் கமல் மட்டுமே என்பதை டிரைலரே நமக்கு எடுத்துரைக்கிறது.

Comments