8th of January 2015
சென்னை:சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'புலி' திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அந்த படத்தின் வியாபாரம் இப்பொழுதே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
புலி' படத்தின் சென்னை மற்றும் என்.எஸ்.சி ஏரியாக்களின் உரிமைகளை மறைந்த இயக்குனர் ராம.நாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியுள்ளது.
கத்தி' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியால் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொகைக்கு இந்த ஏரியாக்களின் உரிமை விற்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடித்து வரும் 'புலி' படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். பி.டி.செல்வகுமார் தயாரித்து வரும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment