சமூக வலைத்தளத்தில் விஜய் அதிக ஆர்வம் காட்டுவது ஏன்…??!!!

13th of January 2015
சென்னை:ரஜினி, கமல், அஜித், விஜய் என பெரிய ஹீரோக்கள் யாரும் அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டியதில்லை. ஆனால் கோச்சடையான் வெளியீட்டிற்கு முன்பாக சமூக வலைத்தளங்களில் தன்னை இணைந்துகொண்டார் சூப்பர் ஸ்டார் காரணம் சமூக வலைத்தளங்களில் அதிக விளம்பரம் கிடைக்கும், அதோடு ரசிகர்களுடன் நேரடியாக உரையாடலாம் என்பது தான் மூலகாரணம்.

அதே போல விஜய் இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக தன்னை இணைத்து கொள்கிறார். இதற்கு காரணம் அவரது மகன் சஞ்சய் தானாம், சமூக வலைத்தளத்தில் அவரது மகனின் ஈடுபாட்டை கவனித்து வந்த விஜய் தானாக அதில் தன்னை இணைந்து கொண்டார். முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை தலைவிரித்தாடுகிறது சமூக வலைத்தளங்களில் இதை பார்த்த சஞ்சய் இதற்கு ஒரு முடிவு கட்டுங்கள் என்று கூறியதால் தான் விஜய் அவரது ரசிகர்களுக்கு எச்சரிக்கைவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
அதோடு தற்போது விஜய் படம் என்றால் அதற்கு தடை என்பது போல ஆங்காங்கே ஒரு குழு செயல்பட்டு வருகிறது. படத்திற்கு பெயர் வைத்தால் போதும், இது அதுவாச்சே உடனே தடை போட வேண்டும் என இவர்களாக ஒன்றை யோசித்து மூக்கை நுழைத்து விடுகின்றனர் என்பதால் அவற்றை தெளிவு படுத்ததான் இந்த ஆர்வம்.

Comments