ஜி.வி.பிரகாஷின் படத்துக்கு போட்டாச்சு பூஜை!!!

20th of January 2015
சென்னை:பொங்கலுக்கு வெளியான ‘டார்லிங்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா என அடுத்த அட்டாக்கிற்கு தயாராகி விட்டார் ஜி.வி.பிரகாஷ்.  ஜி.வி.யின் அடுத்த பட டைட்டில் தான் ‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’.

டமால் டுமீல்’ படத்தை தயாரித்த ரிபெல் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்தப்படத்தை ஆதிக் என்பவர் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார். அப்ப மியூசிக்.. அதுவும் ஜீ.வி.பிரகாஷே தான். இந்தப்படத்திற்கான பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பும் விரைவில் துவங்கப்பட உள்ளது.

Comments