விளம்பர ஒப்பந்தத்தை மீறாத த்ரிஷா!!!


23rd of January 2015
சென்னை:விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்கள், சொந்த வாழ்க்கையில் தாங்கள் புரமோட் செய்யும் பொருள்களை வாங்குவதோ, பயன்படுத்துவதோ கிடையாது. பணத்துக்காக செய்யும் விளம்பரத்தை சொந்த வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்று என்ன நிர்ப்பந்தம்?

ஆனால், சில கோலா கம்பெனிகள், தங்களின் விளம்பரங்களில் நடிப்பவர்கள் அவர்களின் கோலா தவிர வேறு எதையும் பொதுவெளியில் அருந்தக் கூடாது என்று விளம்பர ஒப்பந்தத்தில் ஒரு ஷரத்தையும் சேர்த்துக் கொள்வதுண்டு.
த்ரிஷா போத்தீஸ் துணிக்கடை மற்றும் என்ஏசி ஜுவல்லரி விளம்பரங்களில் வருகிறார். அவர் தனது திருமண நிச்சயதார்த்தத்துக்கு இந்த கடைகளிலிருந்தே உடையும், நகையும் வாங்கியுள்ளார். வேறு கடைகளில் இவற்றை வாங்கினாலும் யாருக்கும் தெரியப் போவதோ, யாரும் கேள்வி கேட்கப் போவதோ இல்லை. எனினும், தான் விளம்பரம் செய்யும் பொருள்களையே வாங்கியுள்ளார்.
 
மேடம்... உங்க நேர்மை பிடிச்சிருக்கு!

Comments