பொங்கல் ரேசிலிருந்து விலகும் படங்கள்!!!

4th of January 2015
சென்னை:ஜனவரி 14, 2015ல் பொங்கல் சிறப்பாக அஜித்தின் ‘என்னை அறிந்தால்’, விக்ரமின் ‘ஐ’, விஷாலின் ‘ஆம்பள’, கார்த்தியின் ‘கொம்பன்’, மற்றும் சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’ வெளியாகும் என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ‘என்னை அறிந்தால்’ ரிலீஸ் ஜனவரி 29 என மாற்றப்பாட்டுள்ளது.

தற்போது ‘கொம்பன்’, மற்றும் ‘காக்கி சட்டை’ உள்ளிட்ட படங்களும் பிப்ரவரியில் எனவும் மேலும் உறுதியான தேதிகள் அறிவிக்கப்படாமலும் இருந்து வருகின்றன.
 
இந்நிலையில் பொங்கல் ரேசில் இந்த வருடம் ‘ஐ’ படமும் ‘விஷாலின் ‘ஆம்பள’ இரண்டும் மட்டுமே வெளியாகும் என இப்போதைக்கும் உறுதியாகியுள்ளது. இதற்கு ஒரே காரணம் தியேட்டர் மற்றும்
 
ஓபனிங் டே கலெக்‌ஷன் என்ற வழக்கம் தான்.
ஒருவேளை ‘ஐ’ , மற்றும் ‘என்னை அறிந்தால்’ இரண்டும் வெளியானால் சிறு படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பது அரிது, அப்படியே மற்ற படங்கள் ஒதுங்கி கொண்டாலும் இவ்விரு பெரும் படங்களும் ஓபனிங் கலெக்‌ஷன் பார்ப்பதும் சற்று சிரமம் ஆகிவிடும்.
 
இதனால் இப்போதைக்கு பொங்கல் ரிலீஸ் ரேசில் இரு படங்கள் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments