ஹன்சிகாதான் விஷாலுடைய பேவரைட்டாம்!!!

22nd of January 2015
சென்னை:பொங்கலுக்கு ரிலீஸான ஆம்பள படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சமீபத்தில் இதன் சக்சஸ் மீட் நடைபெற்றது. அதில் விஷால் பேசும் போது, இது நான் எப்போதோ நடக்க வேண்டுமென்று கனவு கண்ட நிகழ்ச்சி. இதே போல் ‘மதகதராஜா’வுக்கு கனவு கண்டேன். 2012ல் பொங்கலுக்கு வரவேண்டிய படம் அது வரவில்லை. எனக்குள் ஒரு வெறித்தனமான உணர்வு இருந்தது,

மீண்டும் எங்கள் கூட்டணியில் ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டுமென்று. இந்தப் பொங்கலுக்கு ‘ஆம்பள’அப்படி அமைந்திருக்கிறது. அந்தப் படம் வராத வலியும் கோபமும் ஆதங்கமும் மன அழுத்தமும் எனக்குள் இருந்தது. நிச்சயமாக இந்தப்பட வெற்றி அதையெல்லாம் ஒதுக்கி வைத்து ஓரங்கட்டியிருக்கிறது.
இந்தப்படத்தை எல்லாரும் தங்கள் சொந்தப்படம் போல நினைத்து உழைத்தார்கள். 3மாதம் கடுமையான உழைப்பு. பொங்கல் அன்று எல்லாரும் பொங்கல் கொண்டாடிக் கொண்டிருந்தபோது படம் முடித்த நிம்மதியில் நான் தூங்கிக் கொண்டிருந்தேன்” என்றார். அவரிடம் உங்களுக்கு பொருத்தமான, உங்களுடைய அபிமான கதாநாயகியார் என்று கேட்ட போது.. “நிச்சயம் ஹன்சிகாதான்.. ஹன்சிகாதான் என் பேவரைட் என்றார்.

Comments