4th of January 2015
சென்னை:சிவா மனசுல சக்தி’ படம் மூலமாக ஒரு வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமாகிய ராஜேஸ், அந்தப்படத்தின் மூலம் ஜீவாவுக்கு மிகப்பெரிய பிரேக் தந்தார். தற்போது ஆர்யாவை வைத்து ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என்கிற படத்தை இயக்கிவருகிறார் ராஜேஸ். இந்தப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ஜீவா நடிக்கும் படத்தை ராஜேஸ் இயக்கவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
அதற்கான கதை பற்றியும் இருவரும் விவாதித்துவிட்டார்களாம். தற்போது ராம்நாத் என்பவர் இயக்கத்தில் நயன்தாராவுடன் ஜீவா நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் அடுத்தது ராஜேஸின் படத்தில் தான் ஜீவா நடிக்க இருக்கிறாராம். ‘யான்’ சறுக்கலில் இருந்து மீண்டு வர இந்த புது வருடத்தில் ஜீவாவுக்கு ராஜேஸின் படம் பக்கபலமாக இருக்கும் என நம்புவோம்.
Comments
Post a Comment