13th of January 2015
சென்னை:கவுண்டமணியை பற்றிய முன்னுரை எதுவும் இல்லாமல் நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடலாம்.. ஒரு இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தனது ராஜபாட்டையில் அடியெடுத்து வைத்திருக்கும் கவுண்டமணி வாய்மை, ‘49-ஒ’. ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இவற்றின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் அடுத்ததாக புதியதொரு படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

படத்தின் பெயர் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’.. எப்படி ஒரு நெத்தியடியான டைட்டில் பார்த்தீர்களா..? இந்தப்படத்தில் சினிமா கம்பெனிகளுக்கு கேரவனை வாடகைக்கு விடுபவராக நடிக்கிறார் கவுண்டமணி. எல்லா விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் கவுண்டமணி, ஒரு படப்பிடிப்பிற்காக கேரவனுடன் மதுரை செல்லும்போது வழியில் சந்திக்கும் பிரச்சனைகள் தான் படத்தின் கதையாம்.
இந்தப்படத்தை இயக்குபவர் சுசீந்திரனின் உதவியாளரான பாலமுருகன். முழுக்க முழுக்க கவுண்டமணிக்காகவே தயார் செய்யப்பட இந்த கதையை கேட்டு விழுந்து விழுந்து சிரித்த கவுண்டமணி, உடனே படப்பிடிக்கு கிளம்புங்கள் என சொல்லிவிட்டாராம். மதுரை, சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில் இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
Comments
Post a Comment