8th of January 2015
சென்னை:சிம்பு தேவன் இயக்கத்தில், விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் புதிய படத்திற்கு பல்வேறு பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது புலி என்ற டைட்டிலை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டனர்.
சரித்திர பின்னணி, சமகாலப் பின்னணி என இரு மாறுபட்ட காலகட்டங்களில் நடப்பது மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. எனவே புலி என்ற தலைப்பு படத்திற்கு மிக பொருத்தமாக இருக்கும் என்று கருதினார் சிம்புதேவன்.
புலி என்ற டைட்டிலை இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்தார்.
எனவே அந்த தலைப்பை விட்டுத்தரும்படி எஸ்.ஜே.சூர்யாவிடம் கேட்டுக் கொண்டனர்.
எஸ்.ஜே.சூர்யாவும் தனக்கு விஜய் மீது இருக்கும் அன்பாலும், மரியாதையாலும் புலி என்ற டைட்டிலை அவருக்காக விட்டுக்கொடுத்துள்ளார்.
இதில் என்ன வேடிக்கை என்றால்....புலி என்ற டைட்டிலை எஸ்.ஜே.சூர்யா பதிவு செய்ததே விஜய் நடிக்கும் படத்துக்காகத்தான்.
பல வருடங்களுக்கு முன், வரிசையாக ப்ளாப் படங்களைக் கொடுத்ததால் கடும் மன நெருக்கடியில் இருந்தார் விஜய்.
அவருக்கு குஷி என்ற சூப்பர்ஹிட் வெற்றிப்படத்தைக் கொடுத்தார் எஸ்.ஜே.சூர்யா. பிறகு மீண்டும் விஜய்யை வைத்து இயக்க அவர் தயார் செய்த கதைதான் புலி.
இப்படத்தில் முதலில் நடிக்க ஒப்புக்கொண்ட விஜய், என்ன காரணத்தினாலோ கடைசி நேரத்தில் எஸ்.ஜே.சூர்யா படத்தில் நடிக்க முடியாது என அவரை கழற்றிவிட்டார்.
விஜய்யினால் அப்போது அவமானப்படுத்தப்பட்ட எஸ்.ஜே.சூர்யா, தன்னை அவமானப்படுத்திய விஜய்க்காக இத்தனை வருடமாக பாதுகாத்து வந்த புலி என்ற டைட்டிலை விட்டுக்கொடுத்திருக்கிறார்.
Comments
Post a Comment