லிங்கா நஷ்டத்திற்கு விஜய் தான் காரணமா? இது உண்மையா? பொய்யா?!!!

14th of January 2015
சென்னை:தமிழ் சினிமாவில் சில நாட்களாக அரசியல் ஆட்டம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. சிலர் தங்கள் பப்ளிசிட்டிக்காக ஒரு பெரிய நடிகரின் படத்தை தடை செய்ய கோரி வழக்கு கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஹாட் டாபிக்கே ஒரு போன் கால் தான், லிங்கா நஷ்ட ஈடு கேட்கும் விநியோகஸ்தரும், பிரபல பத்திரிக்கையாளர் ஒருவரும் லிங்கா குறித்து இதில் பேசுகின்றனர்.
இதில் அந்த பத்திரிக்கையாளர் லிங்கா தோல்வி என்ற வதந்தியை விஜய் தான் கூற சொன்னாரா? என்று கோபமாக கேட்டுள்ளார்.
 
மேலும், இதையடுத்து விநியோகஸ்தர்கள் கலந்து கொண்ட ப்ரஸ் மீட்டில் மீண்டும் இதே கேள்வி தான் முன் வைக்கப்பட்டது.
விஜய்க்கும் இவர்களுக்கும் என்ன சம்மந்தம் என திரையுலகத்தினரே தற்போது அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
 
இது உண்மையா? பொய்யா? என்று தெரியவில்லை, ஆனால், உலகத்தில் எங்கு இடி விழுந்தாலும் ஏன் விஜய்யை காரணம் சொல்கிறார்கள் என்று தான் யாருக்கும் புரியவில்லை.

Comments