பொங்கல் பரிசாக மொத்த யூனிட்டுக்கும் தங்ககாசு வழங்கிய விஜய்!!!

19th of January 2015
சென்னை:கத்தி படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் பிரம்மாண்டமான செட்டில் கிட்டத்தட்ட 100கோடி பட்ஜெட்டில் உருவாகிவரும் புலி படத்தின் படபிடிப்பு தற்போது தலகோணத்தில் நடைப்பெற்று வருகிறது.

இந்த படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் என்றும் அதில் மூன்று பாடல்களுக்கு இசை அமைத்து முடித்துவிட்டதாகவும் இன்னும் மூன்று பாடல் மீதமுள்ளதாகவும் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்திருந்தார். அந்த மூன்று பாடல்களும் தயாரிப்பாளருக்கு ரொம்ப பிடித்துப்போக தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு தங்க மோதிரம் பரிசாக அளித்தார்.
 
இதை அடுத்து விஜய், புலி படத்தின் படபிடிப்பு தளத்தில் பணிபுரியும் 265 பேருக்கும் பொங்கல் பரிசாக சொந்த செலவில் தங்ககாசு பரிசளித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா நடிக்கின்றனர், ஸ்ரீதேவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Comments