ஹாலிவுட் நடிக்கிறார் இளையதளபதி விஜய்?!!!

17th of January 2015
சென்னை:ஆங்கில படம் ஒன்றில் நடிக்க வைக்க இளையதளபதி விஜயை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்சரா ராம்குமார் இயக்கத்தில் ஜாக் மைக்கேல், வித்யா, ஹரிணி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஒண்ணுமே புரியல’.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர். ரைஹ்னா இசையமைத்துள்ளார். இப்படம் தமிழில் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அதற்கு முன்னரே ஹாலிவுட்டில் ஆங்கிலத்திலும், மற்றும் ஜெர்மன் மொழியிலும் தயாரிப்பதற்காக பிரபல ஜெர்மன் சினிமா நிறுவனமான ‘ஃபென்ச்சல்-ஜானிஷ் பிலிம் புரொடக்ஷன்ஸ் – ஜிபிஆர் உரிமம் பெற்றுள்ளதாம் ‘இது எதிர்பாராத ஒரு மகிழ்ச்சி.

எனக்கு மட்டுமின்றி தமிழ்த் திரையுலகத்திற்கே பெருமை சேர்க்க கூடிய ஒரு விஷயமாக இதைக் கருதுகிறேன் என்று படத்தின் இயக்குனர் அப்சரா இராம்குமார் கூறியுள்ளார். படத்திற்கு ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர். ரைஹ்னா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் உயிர் நாடி ஏ.ஆர். ரைஹ்னாவின் இசை என்று கூறினார்.

ஒண்ணுமே புரியல' என்கிற திரைப்படம் உலக சினிமாவில் ஒரு புத்தம் புதிய படைப்பு என்றும், இது ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் என்றும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ண்ணுமே புரியல" திரைப்படம் தமிழில் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
ஹாலிவுட் நிறுவனம் ‘ஒண்ணுமே புரியல’ திரைப்படத்தை கலிபோர்னியாவில் உள்ள பிரபல ஹாலிவுட் திரைப்படக் கம்பெனியுடன் இணைந்து உரிமை பெற்றுள்ள ஜெர்மன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

Comments