22nd of January 2015
சென்னை:அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை கூறி பரபரப்பை ஏற்படுத்துபவர் இலியானா. இவர் விஜய்யின் நண்பன் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது டேட்டிங் செல்வது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
டேட்டிங் பற்றி இலியானா கூறியதாவது, டேட்டிங் அன்னிய கலாசாரமாக இருந்தாலும், எனக்கு அது பிடிக்கும். ஆண் நண்பருடன் ‘டேட்டிங்’ போவதை விரும்புறேன். குளிர் இல்லாத இடங்களுக்கு போனால் டேட்டிங்கே வேஸ்டாகி விடும். கடற்கரை பீச் பகுதிகள் டேட்டிங்குக்கு சரியான இடம்.
மணல் பரப்பில் படுத்துக் கொண்டு ஆகாயத்தை பார்த்து அழகை ரசிப்பது இதமான அனுபவமாக இருக்கும். அப்போது அருகில் கண்டிப்பாக ஒயின் இருக்க வேண்டும். ஒயின் குடித்தபடி மணலில் படுத்து பேசிக் கொண்டு இருந்தால் இரு மணங்களும் ஒன்றி போய்விடும் என்று கூறியுள்ளார்.
Comments
Post a Comment