சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால்!!!

14th of January 2015
சென்னை:சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படம் ஜனவரி 13 பெங்களூருவில் தொடங்குகிறது.இவர்கள் கூட்டணியில் வெளியான பாண்டிய நாடு வெற்றி பெற்றதால், மீண்டும் இணைந்து படம் செய்வது என இருவரும் முடிவு செய்தனர். அதன்படி இந்த புராஜெக்ட் ஜனவரி 13 தொடங்குகிறது.

பாண்டிய நாடு படத்தில் விஷாலுடன் நடித்த லட்சுமி மேனனையே இந்தப் படத்திலும் ஹீரோயினாக்க முதலில் திட்டமிட்டனர். பிறகு காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தனர்.
 
படத்தின் பெயர் மற்றும் பிற விவரங்கள் ஜனவரி 13 அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments