கோடிக்கணக்கான பணத்திற்காக கூந்தலை இழந்த ஐஸ்வர்யாராய்!!!

16th of January 2015
சென்னை:முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராயின் அழகுக்கு ஒரு முக்கிய காரணம் அவருடைய அழகிய கூந்தல் என்றால் அது மிகையாகாது. ஆனால் அந்த கூந்தலை ஐஸ்வர்யாராய் கோடிக்கணக்கான பணத்திற்காக இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பல விளம்பர படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யாராய், சமீபத்தில் ஒரு கூந்தல் பராமரிப்பு தரும் அழகு சாதன விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த விளம்பரத்திற்காக ஐஸ்வர்யாராய் தனது நீண்ட கூந்தலை கட் செய்து பாப் ஹேர்ஸ்டைலுக்கு மாறியுள்ளார்.

கோடிக்கணக்கில் பணம் தருவதாக விளம்பர நிறுவனம் கூறியிருந்ததால், கணவர் மற்றும் மாமியாரிடம் அனுமதி பெற்று தனது கூந்தல் ஸ்டைலை ஐஸ்வர்யாராய் மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. நாமெல்லாம் முடி வெட்டினால் நாம் தான் காசு கொடுக்க வேண்டும். ஆனால் ஐஸ்வர்யாராய் முடிவெட்டினால் மட்டும் அவருக்கு காசு கிடைக்கின்றது.

Comments