லட்சுமி மேனனுக்கு விருந்து வைத்த மதுரை மக்கள்!!!

4th of January 2015
சென்னை:குட்டிப்புலி’ படத்தை இயக்கிய முத்தையா தற்போது கார்த்தியை வைத்து இயக்கி வரும் படம் ‘கொம்பம்’. இதில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இவர்களுடன் கோவை சரளா, ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, சண்டைப்பயிற்சி இயக்குநர் சூப்பர் சுப்பராயண் வில்லனாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்று வருகிறது. அப்போது படப்பிடிப்பை காண வரும் பொது மக்களில் சிலர், நடிகை லட்சுமி மேனனை, விருந்துக்காக தங்களது வீட்டுக்கு அழைத்திருக்க, மறுப்பு ஏதும் சொல்லாத லட்சுமி, உடனே அவர்கள் வீட்டுக்கு விருந்துக்கு சென்றுவிட்டாராம்.

எப்போதும் போல தங்களுக்கு சமைக்கும் உணவையே லட்சுமி மேனனுக்கும் சமைத்து கொடுக்க, அதை மகிழ்ச்சியுடன் உண்டு, அவர்களை சந்தோஷப்படுத்தியுள்ளார் லட்சுமி மேனன்.

Comments