27th of January 2015
சென்னை:விக்ரம், எமி ஜாக்ஸன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் 'ஐ'. ஆஸ்கர் ரவிச்சந்திரன் பிரமாண்டமாக தயாரித்திருந்த இப்படம் உலகம் முழுவது 100 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளதாக கூறப்படுகின்றன.
இப்படத்தில் விக்ரமின் நடிப்பை பார்த்து பாராட்டாத ரசிகர்களே இல்லை.. ஏன் திரையுலகினர்கள் கூட விக்ரமின் நடிப்பை பார்த்து மிரண்டு விட்டார்கள்.
இந்நிலையில் இப்படத்திற்கான சக்சஸ் பார்ட்டி சமீபத்தில் நடந்தது. இதில் நடிகர் விஜய் கலந்துக்கொண்டார். விக்ரமும், இளையதளபதி விஜய்யும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கு தெரியும்.
ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இதை மேடையிலேயே சொன்னார் விஜய். அதன்படி விக்ரமிற்காக ஐ படக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்த ஐ படத்தின் சக்சஸ் பார்ட்டியில் கலந்துக்கொண்டு சிறப்பித்தார் விஜய்.
மேலும் விக்ரமை தன் மனம் திறந்து பாராட்டிய விஜய் கடைசியாக படக்குழுவினருடன் சேர்ந்து லூட்டி அடித்தாராம்..
Comments
Post a Comment